CAUVERY COLLEGE FOR WOMEN

Principal's Message

முனைவர் ச. இராமலட்சுமி
முதல்வரின் செய்தி

அறிவு கொள்! தன்னம்பிக்கை பெறு! இலட்சியம் எய்து!

தரமான கல்வி, ஒழுக்கம் மற்றும் ஆளுமை மேம்பாடு என்னும் இலக்குகளின்வழி பெண்களின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றிவரும் 'காவேரி மகளிர் கல்லூரி'க்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

கல்வி என்பது மதிப்பெண் சாதனைகளைத் தாண்டி, சுதந்திரமாகச் சிந்திக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், தங்கள் திறன்களைக் கண்டறியவும், சமூகத்திற்குப் பொறுப்புடன் பங்களிக்கவும் மனிதர்களைத் தூண்டுகிறது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

காவேரி மகளிர் கல்லூரியில் மாணவியரின் வளர்ச்சிக்கு ஏற்ற கற்றல் சூழலை உருவாக்குவதற்கு நாங்கள் பெருமுயற்சி எடுத்துவருகிறோம். இங்கு மாணவியர் புதிய கருத்துக்களை ஆராயவும், விமர்சனரீதியாகச் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ளவும், ஆர்வமுள்ள துறைகளில் முன்னேறவும், எதிர்காலத்திற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு இணையாக ஆராய்ச்சி, புத்தாக்கம், திறன் மேம்பாடு, விளையாட்டு, கலை ஈடுபாடு மற்றும் சமூக நலன் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்த எங்கள் ஆசிரியர்கள் மாணவியரின் கல்விப் பயணம் முழுவதிலும் ஊக்கமளித்து வழிகாட்டுகிறார்கள். உலகளாவிய கற்றல் மற்றும் பணிச்சூழல்களுக்குத் தேவையான அறிவுத்திறன்கள் மற்றும் விழுமியங்களை எங்கள் மாணவியருக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறோம்.

பெண் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனமாக மாணவியரை பொறுப்புள்ள தொழில்துறை நிபுணர்களாகவும், கருணைமிக்க குடிமக்களாகவும், முனைப்புமிக்க தலைவர்களாகவும் உருவாக்குவதே எங்கள் முயற்சியாக உள்ளது.

ஒவ்வொரு மாணவியும் தன் இலட்சியம் குறித்துக் கனவு காணவும், ஆர்வத்துடன் கற்கவும், நேர்மையுடன் செயல்படவும், உறுதியுடன் முன்னேறவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

கல்லூரி வழங்கும் வாய்ப்புகளையும் அனுபவங்களையும் தனிப்பட்ட மற்றும் பணிசார்ந்த வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று மாணவியருக்கு நான் அன்புடன் கூறிக்கொள்கிறேன்.

காவேரி மகளிர் கல்லூரியில் நிகழும் உங்கள் பயணம் கற்றல், புதிய கண்டுபிடிப்புகள், தன்னம்பிக்கை மற்றும் அர்த்தமுள்ள சாதனைகள் நிறைந்ததாக அமையட்டும்.

இலட்சியத்துடன் கற்போம், தன்னம்பிக்கையுடன் வளர்வோம், பொறுப்புணர்ச்சியுடன் வழிநடத்துவோம்.

வெற்றி நிறைந்த ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது நல்வாழ்த்துகள்!

முனைவர் ச. இராமலட்சுமி முதல்வர்
முதல்வர் சுயவிவரம்